லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்
அரக்கோணம்: அரக்கோணத்தில் மாமூல் கேட்டு, லாட்ஜிற்குள் புகுந்து தி.மு.க., கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேரை, கத்தியால் வெட்டிய கும்-பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு, 36; இவரின் தந்தை மணி, 60; இவர்களுக்கு சொந்தமான லாட்ஜ், அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ளது. பைனான்ஸ் தொழிலும் செய்கின்-றனர். லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு, பாபு, லாட்ஜ் மேனேஜர் சுரேஷ், 37, மற்றும் ஜெகன், 33, ஆகியோருடன், கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வந்த நான்கு பேர், பாபுவிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்-டனர். தர மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டினர். கும்பலை தடுத்த பாபுவின் தந்தை மணி, மேனேஜர் சுரேஷ், ஜெகனும் கத்-தியால் வெட்டப்பட்டனர். நான்கு பேரும் அரக்கோணம் அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்படி அரக்கோணம் டவுன் போலீசார், கத்தியால் வெட்டிய ஆசாமிகளை தேடி வருகின்-றனர்.
மேலும்
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
-
வாழை தோட்டத்தில் சந்தன மரம் கடத்தல்; ஏழு பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
-
கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு ரூ.3,500 கோடி வழங்க வேண்டும்; கேட்கிறது அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
-
70 அடி பள்ளத்தில் விழுந்தவர் வீரர்களால் போராடி மீட்பு