வாலிபர் அடித்துக்கொலை உறவினர்கள் போராட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா 31. அலைபேசி மொத்த விற்பனை கடை நடத்தினார். நேற்றுமுன்தினம் இரவு இவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து உடலை தினைக்குளம் நாடார் குடியிருப்பு கடற்கரையில் வீசிச்சென்றனர்.

திருப்புல்லாணி போலீசார் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. செய்யது அப்துல்லாவை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததால் மறியலை கைவிட்டு உடலை பெற்று சென்றனர்.

விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. செய்யது அப்துல்லாவிற்கு அசலின் பானு என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

Advertisement