போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்பட்ட பூனை: கோஸ்டாரிக்காவில் சிறையில் நுாதன கடத்தல்

சான் ஜோஸ்: கோஸ்டாரிகா சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பூனை பிடிபட்டது. பூனையின் உடலில் கட்டி, இரண்டு போதைப்பொருள் பொட்டலங்கள் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்க நாடானகோஸ்டாரிகாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகம். குற்றச்சம்பவங்களும் அதிகம் நடப்பது வழக்கம்.
இங்குள்ள போகோசி சிறைச்சாலைக்குள் வழக்கமான இரவு நேர காவலில் இருந்த ஒரு சிறை அதிகாரி, சிறைக்குள் பூனை ஒன்று நடமாடியதை கண்டுபிடித்தார். பூனையின் தோற்றத்தில் வித்தியாசத்தை கண்ட அவர்,பிடிக்க ஏற்பாடு செய்தார். அதை தொடர்ந்து பூனையை சிறை ஊழியர்கள் பிடித்துவிட்டனர். பின்னர் அதை சோதித்த போது,பூனையின் உடலில் 235.65 கிராம் கஞ்சா மற்றும் 67.76 கிராம் ஹெராயின் அடங்கிய பொட்டலங்கள் ஒட்டிக்கட்டபட்டிருந்தன.அந்தப் பூனை சிறைக்குள் போதை பொருட்களைக் கடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த ,சிறை காவலர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நீதித்துறை அமைச்சகம் பேஸ்புக் சமூகவலைதளத்தில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்தது.
அந்த வீடியோ காட்சியில், ஒரு அதிகாரி, முள்வேலியால் மூடப்பட்ட சங்கிலி-இணைப்பு வேலியில் ஏறும் போது, பூனையை கண்டு உடனடியாக எச்சரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து மற்ற அதிகாரிகள் அதை பிடிக்க விரைவான நடவடிக்கை எடுத்து, பூனை பிடிக்கப்படுகிறது. அதன் பிறகு பூனையை எடுத்துச்சென்ற சிறை ஊழியர்கள்,பூனையின் ரோமங்கள் அடங்கிய உடல் பகுதியில் சுற்றி கட்டப்பட்டிருந்ததை கத்தரிக்கோலால் வெட்டி எடுக்கின்றனர். அப்போது கஞ்சா மற்றும் ஹெராயின் அடங்கிய போதை பொருள் கடத்தல் பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்த காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன.இது சமூக வலை தளங்களிலும் வைரலானது.
அதைபார்த்த நெட்டிசன்கள் அந்த பூனையை நர்கோமிச்சி என்று செல்லப்பெயர் வைத்தனர். போதைப்பொருள் கடத்தல் முயற்சியில் பூனையின் ஈடுபாட்டை சிலர் ரசித்தனர். பெரும்பாலானோர் கோஸ்டாரிகா சிறைகளில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் போக்கு தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்று பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது:
பூனையை பயன்படுத்தி,கடத்த முயற்சித்ததன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பூனையை தேசிய விலங்கு சுகாதார அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மேலும்
-
பாக்., உளவு அமைப்புடன் தொடர்பு; பஞ்சாபில் மேலும் 6 பேர் கைது
-
அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நிரூபிக்காவிட்டால் தலையிட முடியாது; வக்ப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
-
நெதர்லாந்து நிலைப்பாட்டுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி
-
குப்பை கொட்ட எதிர்ப்பு! லாரியை மறித்த மக்கள் கைது
-
ஒடிஷாவில் வங்க தேசத்தவர் கண்டறியும் பணி மும்முரம்
-
மாரியம்மன் கோவில் தேர் 'ஷெட்' சீரமைக்கலாமே!