குடியிருப்பு சங்க நிர்வாகியை தாக்கிய வி.சி., பிரமுகர் கைது

குன்றத்துார் குன்றத்துார் அருகே, வழுதலம்பேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சதன்குமார்ராய், 44; குடியிருப்பு சங்க செயலர்.

சங்கத்தின் முன்னாள் செயலரும், வி.சி., பிரமுகருமான சத்தியமூர்த்தி, 46, சங்க தேர்தலில் தோல்வி அடைந்ததால், சதன்குமார்ராயுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு, சங்க அலுவலகத்திற்கு சென்ற சத்தியமூர்த்தி, சதன்குமார்ராயை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சதன்குமார்ராயை, அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகாரின்படி வழக்கு பதிந்த குன்றத்துார் போலீசார், சத்தியமூர்த்தியை நேற்று கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, சத்தியமூர்த்தி சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement