காகித கூழ் பிரிவில் படிக்க விண்ணப்பிக்கலாம் டி.என்.பி.எல்., நிறுவனம் அறிவிப்பு
கரூர்புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் உதவியுடன், காகிதக்கூழ் பிரிவில் படிக்க விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், சமுதாய நலப் பணித்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, திருச்சிராப்பள்ளி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக்கூழ் பிரிவில் படிக்க அனைத்து கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு, நிறுவனத்தை சுற்றியுள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் உள்பட சுற்றுயுள்ள கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம், 5 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரத்திற்கு ஜூன், 9க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சுங்குடி சேலை விற்பனை அமோகம்; 45 பொருட்களின் விற்பனையும் களைகட்டுகிறது
-
த.வெ.க., தனித்து போட்டியிடுவது நல்லது விஜய்க்கு எச்.ராஜா 'அட்வைஸ்'
-
நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பாரா?: மாநில வளர்ச்சிக்கு டில்லி பயணம் அவசியம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
-
கூடுதல் மகசூல் தரும் காவிரி பூவன்
-
தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
-
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா; உஷார் நிலையில் சுகாதாரத்துறை