காவிரியாற்றில் மூழ்கி முதியவர் பலி போலீசார் விசாரணை

கரூர், கரூர் அருகே, காவிரியாற்றில் மூழ்கிய முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வாங்கல் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 70; இவர் கடந்த, 16 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வாங்கல் மல்லம்பாளையம் காவிரியாற்று பகுதியில், தண்ணீரில் மூழ்கி முனியப்பன் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, முனியப்பனின் மனைவி மல்லிகா, 61; வாங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் காவிரி யாற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது
வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Advertisement