கிரிக்கெட்:  சாமியார் தோட்டம் வெற்றி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் சாமியார் தோட்டம் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.

கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சிசி அணி 44.3 ஓவர்களில் 117 ஆல்அவுட் ஆனது. முகமதுபாஹீம் 45, கார்த்திகைகுமரன் 27, முகமதுஅப்துல்லா 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 30.3 ஓவர்களில் 179/5 எடுத்து வென்றது. அரவிந்த் 40, கவுதம் 36(நாட்அவுட்), அபிேஷக் 35, வெங்டேஷ் 27. திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் சசி அணி 27 ஓவர்களில் 215/6. மக்ரீஷ் 74, ராஜேஷ்குமார் 36. சேசிங் செய்த மன்சூர் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 27 ஓவர்களில் 129/6 எடுத்து தோற்றது. அருண்பாண்டி 50(நாட்அவுட்)

வேடசந்துார் ஜாஹீர் ப்ராமிஸிங் லெவன் அணி 25 ஓவர்களில் 124/8. சுரேஷ்குமார் 35, சிவேஷ்தருண் 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் வெற்றி சிசி அணி 24.4 ஓவர்களில் 128/7 எடுத்து வென்றது. ரமேஷ்குமார் 41, சக்திவேல் 39, லோகேஸ்வரன் 3 விக்கெட். திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 124/7. அருண் 39, எட்வின்அரசன், பாஸ்டின்ஸ்டாலின் தலா 3 விக்கெட். சேசிங் செய்த சாமியார்தோட்டம் சிசி அணி 21.5 ஓவர்களில் 127/8 எடுத்து வென்றது. கார்த்திக் 3 விக்கெட்.பழநி யுவராஜ் சிசி அணி 22.4 ஓவர்களில் 169 க்கு ஆல்அவுட் ஆனது. பேரறிவாளன் 41, கவியரசு 40, மனோஜ்குமார் 5, குமரவேல் 3 விக்கெட். சேசிங் செய்த கொடைரோடு கொடை சிசி அணி 17.2 ஓவர்களில் 65 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. துரைராஜ் 4 விக்கெட்.

Advertisement