வியாபாரிகள் முதல்வரிடம் முறையீடு ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தி வைப்பு

புதுச்சேரி : சாலையோர வியாபாரிகள் முதல்வரிடம் முறையிட்டதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றனர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ரங்கப்பிள்ளை வீதி, தலைமை தபால் நிலையம் அருகில், பொதுப் பணித்துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர். அங்கு சாலையோரத்தில், துணிக்கடைகள், பழக்கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில், அந்த வழியாக முதல்வர் ரங்கசாமி காரில் சென்றார். அப்போது, காரை நிறுத்திய வியாபாரிகள் முதல்வரை சூழ்ந்து நாங்கள் பல ஆண்டுகளாக கடை வைத்திருக்கிறோம். கடைகளை அகற்றினால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என, முறையிட்டனர். அதனை அடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தற்சமயம் ஆக்கிரமிப்புகளை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் கூறினார். அதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement