உலக செவிலியர் தின விழா

திட்டக்குடி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடந்தது.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சேபானந்தம் தலைமை தாங்கி, 'உலகில் தாய்க்கு இணையாக யாரும் இல்லை. தாய் பட்டத்தை பெற்ற செவிலியர்கள் நோயாளிகளிடம், எவ்வித வெறுப்பு, சலிப்பும் இல்லாமல், மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள். அவர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்' என பேசினார். தொடர்ந்து, கேக் வெட்டி இனிப்பு வழங்கி, செவிலியர்களை வாழ்த்தினர்.

ரோட்டரி சங்க தலைவர் சிவகிருபா, செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகசுந்தரம், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement