கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு

மதுரை:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் விதாயகர், சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த பொதுநல மனு:

சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூலை 7, காலை 9:00 முதல், காலை 10:30 மணி வரை கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. சிம்ம லக்கனத்தில் வரும் அந்த நேரம் பொருந்தாது. இந்த நேரத்தில் நடத்த தடை விதிக்க வேண்டும்.

நாட்டின் நலனிற்காக 'அபிஜித்' முகூர்த்தத்தில், ஜூலை 7 மதியம் 12:05 முதல் 12:45 மணி வரை கும்பாபிஷேகம் நடத்துவது தான் சரியானது. அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

கோவில் தரப்பில், 'ஜூலை 7 காலை 6:00 முதல் காலை 6:40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தது.

நீதிபதிகள்: விதாயகர், முத்தான்விளை மடம் தந்திரி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜாபட்டர், சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி அடங்கிய குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படி நேரத்தை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement