பென்னலுார் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பென்னலுார் கிராமத்தில், செல்லியம்மன் கோவில் அருகே, பொது குளம் உள்ளது. இந்த குளம், அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

மேலும், இறந்தவர் களுக்கு குளத்தின் கரையில் ஈமச்சடங்குகளை அப்பகுதியினர் செய்து வந்தனர். தற்போது, கோவில் குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

குளத்தின் கரையில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இந்த குளத்தை பயன்படுத்த முடியாமல், அப்பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, பராமரிப்பின்றி இருக்கும் பென்னலுார் பொது குளத்தை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement