பைக்கில் இருந்த நகை திருட்டு திருச்சி வாலிபர் சிக்கினார்

தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் நெற்குணத்தை சேர்ந்த, விவசாயி ராஜ்மோகன், 50. இவர் கடந்த, 15ல், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த, 4 பவுன் நகையை மீட்டார்.

தொடர்ந்து, நகை, 57,000 ரூபாயை, 'யுனிகான்' பைக் பெட்டியில் வைத்துவிட்டு, சாவியை எடுக்காமல், 'ஜூஸ்' குடிக்க கடைக்குச்சென்றார். பின் வந்தபோது, பெட்டி திறக்கப்பட்டு நகை, பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி, வீரகனுார் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவர் திருடிச்செல்வது பதிவாகி இருந்தது.
விசாரணையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கணேசன், 62, அவரது மகன் ராகவன், 36, ஆகியோர், இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன், கணேசனை, நாமக்கல், எருமைப்பட்டி போலீசார், திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் இருந்த, அவரது மகன் ராகவனை, நேற்று வீரகனுார் போலீசார் கைது செய்தனர். தந்தையுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

Advertisement