அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரி : அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்காக ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்.

புதுச்சேரி கல்வித்துறை சார்பில், வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த 19ம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்திய அரசு பள்ளிகளில் நடந்து வருகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணியும் நடந்து வருகிறது. இன்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைகிறது. அதையடுத்து, பள்ளிகளில் நாளை மெரிட் லிஸ்ட் ஒட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி புதுச்சேரி அரசு பள்ளிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏராளமான மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர்.

Advertisement