தி.மு.க., மாநில அமைப்பாளருடன் அ.தி.மு.க., அன்பழகன் சந்திப்பு

புதுச்சேரி : தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவாவை, அ.தி.மு.க., மாநில செயலாளர் வீடு தேடிச் சென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.,விற்கு பித்தப்பையில் ஏற்பட்ட கல் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது புதுச்சேரி, கோவிந்தசாலை கல்வே பங்களா தெருவில் உள்ள வீட்டில் ஓய்வில் உள்ளார். இவரை, அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், தி.மு.க., அமைப்பாளர் சிவா வீட்டிற்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். அரை மணி நேர சந்திப்பிற்கு பின் அன்பழகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தி.மு.க.,வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரை, அ.தி.மு.க,. மாநில செயலாளர் அன்பழகன் வீடு தேடிச் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement