விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம், அடுக்கம், கெங்கவரம், மழவந்தாங்கல், கடையம், ஒட்டம்பட்டு பகுதி விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், கண்டாச்சிபுரம் வனவர் சுகுமாறன் தலைமையில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில், காப்பு காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சூரிய சக்தி மின்வேலி அமைக்க வனத்துறையில் அனுமதி பெற பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அடுக்கம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement