பெங்களூரு கேப்டனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்

லக்னோ: லக்னோவில் நடந்த பிரிமியர் போட்டியில் ஐதராபாத் அணி (231/6), பெங்களூருவை (189/10) 42 ரன்னில் வீழ்த்தியது. இப்போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியது. ஏற்கனவே மும்பை அணிக்கு எதிராகவும் இதுபோல தாமதம் செய்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதருக்கு (ரூ. 12 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது முறையாக விதி மீறியதால் ரஜத் படிதருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர சக அணி வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ. 6 லட்சம் அல்லது சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இப்போட்டியில் ஐதராபாத் அணியும் தாமதமாக பந்து வீசியது. எனினும் இது முதன் முறை என்பதால், கேப்டன் கம்மின்சிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement