இந்திய ஜோடி இரண்டாவது இடம்

டிபிளிசி: ஜார்ஜியாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, ஜப்பானின் இமாமுரா, தஜிமா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-1 என எளிதாக கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' இந்திய ஜோடி 5-10 என நழுவவிட்டது.
58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-1, 3-6, 5-10 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.

Advertisement