ஒத்தமாந்துறை ஆற்று பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை

கரூர், ஒத்தமாந்துறை அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னதாராபுரம் அருகே, ஒத்தமாந்துறையில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. 2009ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. திருப்பூர், கரூர் மாவட்டங்களை இணைக்கும், ஆற்று பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

பாலம் பயன்பாட்டிற்கு வந்து, 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.

விபத்து அபாயம் இருப்பதால், எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டியிருக்கிறது. சில சமயம், இரவு நேரங்களில் வழிப்பறி அச்சம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். பாலத்தின் கீழ் பகுதியில், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஒத்தமாந்துறை அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement