தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வில் 474ல் 119 'பெயில்'

ஆவடி :கோடை விடுமுறை முடிந்து, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து துறை சார்பில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த வாகனங்களில், வேக கட்டுப்பாடு கருவி, ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவை பொருத்துவது உட்பட, 21 வகையான பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்ற ஆய்வு செய்யப்படுகிறதா என, அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், திருமுல்லைவாயல், பூந்தமல்லி, திருவேற்காடு உட்பட பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த, 474க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், 119 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்தபின், மீண்டும் தணிக்கைக்கு கொண்டுவர அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Advertisement