சோழிங்கநல்லுாரில் திடீர் பள்ளம்

சோழிங்கநல்லுார் :ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பில், மெட்ரோ ரயில் பணி நடைபெறுகிறது. இதோடு, மூடு கால்வாய் பணியும் நடக்கிறது. நேற்று மாலை, மெட்ரோ ரயில் பில்லர் அமைக்கும் இடத்தின் அருகே, திடீரென பள்ளம் விழுந்தது.


இதனால், போக்குவரத்து போலீசார், வாகனங்களை சில அடி துாரத்துக்கு முன் நிறுத்தினர். பின், மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் பள்ளத்தை ஆய்வு செய்தனர். குழாய் மற்றும் கேபிள் செல்லும் இடத்தில் உள்வாங்கியது தெரிந்தது. இதையடுத்து,, மெட்ரோ பனி ஊழியர்கள், இரும்பு தகடு மற்றும் ஜல்லி, மண் கொட்டி சமப்படுத்தினர். இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் சீரானது.

Advertisement