வெவ்வேறு விபத்தில் 4 பேர் பலி

ஓசூர் :ஓசூர் அருகே, தொடுதேப்பள்ளியை சேர்ந்தவர் அரவிந்த், 19. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, டியோ ஸ்கூட்டரில், பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். மூக்கண்டப்பள்ளி மேம்பாலம் மீது சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ் மோதியதில், அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற கதிரேப்பள்ளியை


சேர்ந்த அரவிந்த்குமார், 23, என்பவர் காயமடைந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்தவர் மனோகர், 30. நேற்று
முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு, ஹோண்டா ஹார்னெட் பைக்கில், ஓசூர் - கெலமங்கலம் சாலையில் சென்றார். குந்துமாரனப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனம் அருகே, முன்னால் சென்ற ஈச்சர் லாரி, திடீரென பிரேக் போட்டதில் அதன் பின்னால் பைக் மோதியதில், மனோகர் படுகாயமடைந்து பலியானார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 55, தொழிலாளி. கடந்த, 23 இரவு காவேரிப்பட்டணம் அருகே, தர்மபுரி சாலையில் மாட்டு வண்டியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ், மாட்டு வண்டி மீது மோதியது. இதில், மாட்டு வண்டியை ஓட்டி சென்ற நாகராஜ் பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* போச்சம்பள்ளி அடுத்த, பாரூர், அனுமாகோவில்பள்ளத்தை சேர்ந்தவர் ரமேஷ், 30. ஆவண எழுத்தர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பஜாஜ் அப்பாச்சி பைக்கில், பணங்காட்டூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, மத்துாரிலிருந்து மாங்காய் ஏற்றி, புலியூருக்கு சென்ற பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். போச்சம்பள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement