குவாரிகளில் ஆய்வு நடத்த அரசு உத்தரவு

சென்னை:'மண் சரிவு, வெடி விபத்து நடப்பதை தடுக்க, அனைத்து குவாரிகளிலும், புவியியல், சுரங்கத்துறை மண்டல, மாவட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்' என, அத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சேலம், விழுப்புரம், திருச்சி, மதுரை மண்டல இணை இயக்குநர்கள், துறையின் மாவட்ட துணை, உதவி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முறையாக கடைப்பிடிக்காததே எதிர்பாராத விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

'எனவே, இனி வரும் காலங்களில் குவாரிகளில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில், அனைத்து குவாரிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Advertisement