சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

குத்தம்பாக்கம்:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

இந்த குப்பையை முறையாக அகற்றாமல், அப்பகுதியிலேயே துப்புரவு பணியாளர்கள் தீயிட்டு எரித்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் புகையால், இவ்வழியே செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுத்து, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement