அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி

1


தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பெண்கள், சிறுமியருக்கு பாதுகாப்பில்லை. அரக்கோணத்தைச் சேர்ந்த அபலை பெண், தி.மு.க., நிர்வாகி தெய்வசெயல் தன்னை கொடுமைப்படுத்தியதாக மாவட்ட போலீசில் புகார் கொடுத்தும் அதை உடனடியாக பதிவு செய்யாமல் அலைக்கழித்துள்ளனர்.

பின், காலதாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்விஷயத்தில் அ.தி.மு.க., களமிறங்கியதும் நாடகமாடுகின்றனர்.


இருந்தபோதும், புகாருக்கு உள்ளான நபர், ஜாமினில் வெளிவர போலீசாரே உதவி இருக்கின்றனர். தெய்வசெயல் துணிச்சலுடன் வெளியில் நடமாடுகிறார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் உள்ளிட்ட அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இதெல்லாம் வெளியில் தெரியக்கூடாது என, சட்டம் கூறுகிறது.


தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கவர்னரிடம் புகார் கொடுக்க சென்ற பெண்ணை, தமிழக போலீசார் தடுத்து விரட்டியுள்ளனர். தமிழகத்தில் அலங்கோலமான ஆட்சி நடக்கிறது என்பதற்கு, அரக்கோணமே சாட்சி.


- பழனிசாமி,

பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Advertisement