துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை

நாகப்பட்டினம்: நாகை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கருவூல பதிவேடுகள் அறையில், நாகை ஆயுதப்படையில் பணியாற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் காவலர் அபிநயா, 29, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. இந்நிலையில், கருவூல பதிவேடுகள் அறை பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
கலெக்டர் அலுவலத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்ததில், கழுத்து பகுதியில் துப்பாக்கியால் சுட்டு, அபிநயா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நாகூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement