மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தேனி,: மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம், ஆண்டிபட்டி தாலுகா பாலகோம்பை ஊராட்சி பகுதிகளில் நடந்துவரும் வீடுகள் சீரமைத்தல் பணி, கனவு இல்ல திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் உள்ளிட்டோர் ஆய்வில் உடனிருந்தனர்.

Advertisement