சென்னிமலையை தாலுகாவாக அறிவிக்க கம்யூ தீர்மானம்
சென்னிமலை: இ.கம்யூ., கட்சியின், சென்னிமலை ஒன்றிய, 36-வது மாநாடு சென்னிமலையில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் நைனாமலை கொடியேற்றினார். நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில துணை செயலாளர் பெரியசாமி மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஒன்றிய செயலாளராக செங்கோட்டையன், துணை செயலாளர்களாக கண்ணுசாமி, ரவி, ஒன்றிய பொருளாளராக பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி நிறைவுரை ஆற்றினார். பெருந்துறை தாலுக்காவில் இருந்து பிரித்து, சென்னிமலையை தனித் தாலுகாவாக அறிவிக்க வேண்டும். சென்னிமலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்; கனமழை தொடர்வதால் திடீர் அறிவிப்பு
-
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு;கோவையில் 62 சதவீதம் பேர் பங்கேற்பு
-
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
-
ஹார்வர்டு பல்கலைக்கு அதிக மானியம் வழங்க மாட்டோம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
கோவையில் அதிகபட்சமாக வால்பாறையில் 54 மி.மீ., மழை
Advertisement
Advertisement