தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா
ஓசூர்:ஓசூர் அருகே, மத்திகிரி காடிபாளையம் கிராமத்திலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 33ம் ஆண்டு திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 22ம் தேதி காலை பெண்கள் பால்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
23ம் தேதி காலை சுவா-மிக்கு சிறப்பு பூஜை, ஹோமம், மாவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் கரகம், அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை பக்-தர்கள் கோவில் முன் பொங்கலிட்டு, கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் விழாக்-குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement