ஆறுபடை முருக பக்தர்கள் சேவா சங்க மாநில மாநாடு
நாமக்கல்: ஆறுபடை முருக பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், முதல் மாநில மாநாடு நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநாட்டை-யொட்டி, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பாலதண்டாயு-தபாணி சுவாமி கோவிலில் இருந்து, மாநாடு நடக்கும் திருச்சி சாலை வரை, முருக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மாநாட்டில், 12 மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், மாணவ, மாணவியரின் நாட்டியம், சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவு நடந்தது.
மாநாட்டில், முருக பக்தர்களை ஒருங்கிணைப்பது, கோவில்-களில் உழவார பணிகளை மேற்கொள்வது, குடமுழுக்கு விழா காலங்களில், சேவை பணிகளில் முருக பக்தர்கள் ஈடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடு-களை, நாமக்கல் ஆறுபடை முருக பக்தர்கள் சேவா சங்க நிர்வா-கிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement