கலிக்கம் கண் சிகிச்சை முகாம்

ப.வேலுார்: ப.வேலுார், அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை சார்பில், கலிக்கம் கண் சிகிச்சை முகாம், செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. முகாமில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகு-றித்து, திண்டுக்கல்லை சேர்ந்த சித்தா டாக்டர் அசோகன் கூறியதா-வது:


உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழி-யாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை. இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பப்பை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்-தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது. ஐ.ஓ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்-டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement