பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

3

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் நடந்த குண்டு வெடிப்பில் காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்தான்.



பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள மஜிதா சாலை பைபாஸில் பல சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு நபர் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காலிஸ்தான் பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் சதி ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.


இது குறித்து டி.ஐ.ஜி சதீந்தர் சிங் கூறியதாவது: குண்டுவெடிப்பு நடந்தபோது வெடிபொருள் அவரது கைகளில் இருந்தது. அவரது அடையாளம் மற்றும் அவர் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்ள பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் உண்மைகள் கண்டுபிடிக்கப்படும். மக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement