வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.15 வரை நீட்டிப்பு!

புதுடில்லி: 2025-26ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31 லிருந்து செப். 15 ஆக நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முடிந்த 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 லிருந்து செப்டம்பர் 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், 2025-26க்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு தயார்நிலை மற்றும் வெளியீட்டிற்குத் தேவையான நேரத்தைக் கருத்தில் கொண்டும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கு சுமூகமான மற்றும் வசதியான தாக்கல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில், இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும்
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
-
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு