உயர்நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை: அவர்கள் யார்? யார்?

புதுடில்லி: ஐகோர்ட் நீதிபதிகள் 21 பேரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
1. நீதிபதி சுஜோய் பாலை கொல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பதவி வைக்கிறார்.
2. நீதிபதி வி. காமேஸ்வர் ராவை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து டில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
3. நீதிபதி லனுசுங்கும் ஜமீர் - குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4. நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக்கை குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
5.நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரேவை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
6. நீதிபதி அஸ்வனி குமார் மிஸ்ராவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் அல்லது ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
7.நீதிபதி சுமன் ஷியாமை குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
8. நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மாவை பஞ்சாப் அல்லது ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
9. நீதிபதி விவேக் சவுத்ரியை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
10. நீதிபதி தினேஷ் குமார் சிங்யை கேரளா உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
11. நீதிபதி விவேக் குமார் சிங்யை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
12. நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
13. நீதிபதி ஓம் பிரகாஷ் சுக்லாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
14. நீதிபதி ஸ்ரீ சந்திரசேகரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
15. நீதிபதி சுதிர் சிங்யை பஞ்சாப் உயர் நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
16. நீதிபதி அனில் ஷேதர்பாலை ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
17. நீதிபதி அருண் குமாரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
18. நீதிபதி ஜெயந்த் பானர்ஜியை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
19. நீதிபதி சி. சுமலதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
20. நீதிபதி லலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
21. நீதிபதி அன்னிரெட்டியை பாட்னா உயர் நீதிமன்றத்திலிருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



மேலும்
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
-
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு