கஞ்சா வியாபாரிக்கு கையில் 'மாவுக்கட்டு'

பேசின்பாலம் புளியந்தோப்பு சால்ட் கோட்ரஸ் பகுதியில் நேற்று பேசின்பாலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து வாலிபர் ஒருவர் சுவர் மீது ஏறி குதிக்கும்போது கீழே விழுந்தார். இதில், அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதையடுத்து, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டு விசாரணை நடத்தியதில், வியாசர்பாடி பி.என்.டி., குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ‛கார்டன்' சரத், 28, என்பதும், அவர் மீது எட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement