இன்றைய நிகழ்ச்சி / மே 28 க்குரியது

கோயில்

மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் குதிரை எடுப்பு திருவிழா: வள்ளி திருமணம் நாடகம், பெரியபட்டி அம்மன் கோயில் திடல், வலையபட்டி, மதுரை, ஆடல் பாடல் நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு மேல்.

வைகாசி விழா - பீமன் கீசகம் வேடம்: திரவுபதை அம்மன் கோயில், மேலுார், காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா : நிகழ்த்துபவர் -- பார்வதி ராஜேந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பாகவத நாம சங்கீர்த்தன மேளா -- பகவந் நாம பிரச்சார மண்டலி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, தேவி மகாத்மியம் பாராயணம் : சென்னை ராம் ராம் சேவா சங்கம், சண்டி ஹோமம், 1008 சாலக்ராம பூஜை, காலை 6:00 மணி முதல்.

பொது

முருக பக்தர்கள் மாநாடு பூமி பூஜை: வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, பங்கேற்பு : பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சின்ன பாலன், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 6:00 முதல் 7:30 மணி வரை.

வண்ண வண்ணப் பூக்கள் செய்வோம் - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்: கன்னிகா பரமேஸ்வரி மஹால், மேலுார், ஏற்பாடு : மேலுார், மருதம் வட்டார களஞ்சியம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி, அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

Advertisement