கொப்பரைக்கு அதிகபட்ச விலை மகிழ்ச்சியில் விவசாயிகள்
சோழவந்தான் : சோழவந்தான் அருகே டி.ஆண்டிப்பட்டியில் மதுரை வேளாண் விற்பனை குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம் நடந்தது.
மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலத்தில் 23 வியாபாரிகள், 6 விவசாயிகள் பங்கேற்றனர். மொத்தம் 33,756 தேங்காய்கள் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 232க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் அதிகபட்சம் ரூ.26.20, குறைந்தபட்சம் ரூ.9.10, சராசரியாக ரூ. 20.50 க்கு ஏலம் போனது.
கொப்பரை தேங்காய் ஏலத்தில் 8 வியாபாரிகள், 6 விவசாயிகள் பங்கேற்றனர். 573.6 கிலோ ரூ.1 லட்சத்துக்கு 4 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக ரூ.201, குறைந்தபட்சமாக ரூ.163, சராசரியாக ரூ. 174 ஏலம் போனது. 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொப்பரைத் தேங்காய் அதிகபட்ச விலைக்கு விற்பனையானது.
வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் நாகமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும்
-
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் கைவிரிப்பு
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்