சிறுதானியங்கள் பயிரிட ரூ.13 லட்சம் மானியம் வேளாண் அதிகாரி தகவல்


காங்கேயம் காங்கேயம் வேளாண்மை துறை அலுவலகத்தில், சிறுதானிய பயிர்களின் உற்பத்தி குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:

நாம் அன்றாடம் உட்கொள்ளும் அரிசி உணவை தாண்டி, அனைத்து வகையான சிறுதானிய உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும். இதனால் மனித உடலுக்கு ஆரோக்கியம் அதிகம். எனவே சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை பெருக்க வேண்டி உள்ளது.


தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் - ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம் திட்டத்தின் மூலமாக பயிரிடப்படும் சோளம் மற்றும் தானிய மகசூலை மேம்படுத்த, வேளாண்துறை கோ-32 சோளத்துக்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், இதர இடுபொருட்கள், செயல் விளக்கம் அமைத்து விவசாயிகளுடையே கொண்டு செல்ல செயல்படுத்தி வருகிறது. சிறுதானிய உற்பத்திக்காக காங்கேயம் வட்டாரத்துக்கு, 13 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

Advertisement