பவானிசாகர் நீர்மட்டம் 'கிடுகிடு' நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்வு

பவானிசாகர், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. பில்லுார் அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் பவானி ஆறு வழியாக அணையை வந்தடைகிறது.

நேற்று அணை நீர்வரத்து, 18 ஆயிரத்து, 461 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம், 75.57 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 13.4 டிஎம்சி ஆக உள்ளது. அதாவது நேற்று முன்தினம், ௨.௫ அடி உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில், ௩ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement