மெட்டாலா சாலையில் நிரம்பி வழியும் குப்பை
நாமகிரிப்பேட்டை :நாமகிரிப்பேட்டை அடுத்த, மெட்டாலா பிரதான சாலையில் குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா கிராமம் ஆத்துார் பிரதான சாலையில் உள்ளது. இங்கு காய்கறி மண்டிகள் அதிகளவு உள்ளன. அதேபோல், கொல்லிமலைக்கு செல்லும் சாலையும் மெட்டாலாவில் இருந்துதான் பிரிந்து செல்கிறது. இதனால் மெட்டாலா பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருக்கும்.
விவசாயிகள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்வதால், மெட்டாலாவில் அதிகளவு குப்பை சேருகிறது. ஆனால், அதை பஞ்., நிர்வாகம் சுத்தப்படுத்துவதில்லை. முக்கியமாக குப்பைத்தொட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மெட்டாலாவில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையோரம் குப்பைகள் நிரம்பி வழிந்து சாலையில் பறக்கின்றன. இதனால், பயணிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பையை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
மேலும்
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
-
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு