அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, எக்ஸ் தளத்தில் தான் பதிவிட்ட பதிவை தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப், எலான் மஸ்க் சமூக ஊடகங்களில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஜெப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டதாக எலான் மஸ்க் நேரடியாக குற்றம்சாட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாகவே பொதுவெளியில் ஆவணங்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த செயலால் அதிருப்தி தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எக்ஸ்தளப் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.




மேலும்
-
வீட்டில் படுத்திருந்த தேங்காய் வியாபாரி சாவு
-
சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்
-
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை கட்டித்தழுவி வாழ்த்து பரிமாற்றம்
-
மாணவர்களுக்கு பரிசு பா.ம.க.,வினர் வழங்கல்
-
சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
-
மல்லியங்கரணை சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு