வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி காய்கறி மொத்த விற்பனை சந்தையில் வெண்டைக்காய் கிலோ ரூ.6க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பாறைப்பட்டி பரமன்: 25 சென்ட் நிலத்தில் உழவு, விதை, களையெடுப்பு, உரம், மருந்து என ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலவாகியுள்ளது. தற்போது காய் பறிக்கும் பருவத்தில் கிலோ ரூ.30க்கு விற்று வந்த நிலையில், நேற்று கிலோ ரூ.6க்கு விற்பனையானது.

50 கிலோ வெண்டைக்காய் பறித்து வந்ததில் வண்டி வாடகை ரூ.60, கமிஷன் ரூ.30 போக ரூ.210 கிடைத்துள்ளது. இதனை வைத்து காய் பறித்தவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். விலை குறைவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement