இன்டர் மிலன் அணி 'டிரா': கிளப் உலக கோப்பை கால்பந்தில்

லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்டர் மிலன், மான்டேரி அணிகள் மோதிய கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி 'டிரா' ஆனது.

அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் இன்டர் மிலன் (இத்தாலி), மான்டேரி (மெக்சிகோ) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது. மான்டேரி அணிக்கு ரமோஸ் (25வது நிமிடம்), இன்டர் மிலன் சார்பில் மார்டினஸ் (42வது தலா ஒரு கோல் அடித்தனர்.

சியாட்டில் நகரில் நடந்த மற்றொரு 'இ' பிரிவு லீக் போட்டியில் ரிவர் பிளேட் (அர்ஜென்டினா), உரவா ரெட் டயமண்ட்ஸ் (ஜப்பான்) அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ரிவர் பிளேட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நியூ ஜெர்சியில் நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி), புளூமினென்ஸ் (பிரேசில்) அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

Advertisement