ரூ. 2.5 கோடி மதிப்பில் வடிகால் பணி துவக்கம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் ரூ. 2.5 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

பொதுப்பணித்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதி, நெட்டப்பாக்கம் மேட்டு தெருவில் ரூ. 75 லட்சம் மதிப்பில் 'ட' மற்றும் 'ப' வடிவ வாய்க்கால், நெட்டப்பாக்கம் சிங்கக்கட்டை முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை, அதேபோல், ஊரல் வாய்க்கால் வரை 1,100 மீட்டர் நீளம் வரை ரூ. 1 கோடியே 72 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் 'ப'வடிவில் வாய்க்கால் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் வீரச்செல்வம், சந்திரகுமார், உதவிப் பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement