ஹாக்கி: இந்தியா 3வது இடம்

பெர்லின்: ஜூனியர் ஹாக்கி தொடரில் இந்திய அணி 3வது இடம் பிடித்தது.
ஜெர்மனியில், நான்கு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஜூனியர் ஹாக்கி தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் மோதின. முதல் போட்டியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்தியா, பின் எழுச்சி கண்டு 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது.
மூன்றாவது போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக தோல்வியடைந்தது.மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு ரோகித் (45வது நிமிடம்), அஜீத் யாதவ் (52வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அபிநந்தனை சிறைபிடித்த அதிகாரி பாக்., பயங்கரவாதிகளால் கொலை
-
சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா
-
போதைப்பொருள் கடத்தல் வழித்தடமாக மாறியுள்ளது திரிபுரா: முதல்வர் வேதனை
-
'இளைஞர்களை வேகமாக சேருங்கள்' கட்சியினரை முடுக்கிவிடும் பழனிசாமி
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உச்ச நீதிமன்ற உயர் மட்ட குழு ஆய்வு
-
இலங்கைக்கு படகில் கடத்த பதுக்கப்பட்ட 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ராமநாதபுரத்தில் ஒருவர் கைது
Advertisement
Advertisement