சதம் விளாசினார் திலக் வர்மா

செம்ஸ்போர்டு: இங்கிலாந்தில் கவுன்டி டிவிசன் 1 தொடர் நடக்கிறது. முதன் முதலாக இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் திலக் வர்மா 22, ஹாம்ஷயர் அணிக்காக பங்கேற்கிறார். ஹாம்ஷயர், எசக்ஸ் அணிகள் மோதும் போட்டி செம்ஸ்போர்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் எசக்ஸ் அணி 296 ரன் எடுத்தது.
ஹாம்ஷயர் அணிக்கு பிளட்சா (61) அரைசதம் அடித்து உதவினார். 4வது வீரராக களமிறங்கிய திலக் வர்மா, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 241 பந்தில் 100 ரன் எடுத்து கைகொடுத்தார். கேப்டன் பென் பிரவுன் 42 ரன் எடுக்க, லியாம் டாசன் 139 ரன் அடித்தார். பின் வரிசையில் டாம் பிரஸ்ட் (41) ஆறுதல் தந்தார். முதல் இன்னிங்சில் ஹாம்ஷயர் அணி 453 ரன் குவித்து 157 ரன் முன்னிலை பெற்றது.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய எசக்ஸ் அணிக்கு கேப்டன் வெஸ்ட்லே (125) சதம் அடித்து உதவினார். இரண்டாவது இன்னிங்சில் எசக்ஸ் அணி, 349/6 ரன் எடுத்திருந்தது.
மேலும்
-
போதைப்பொருள் கடத்தல் வழித்தடமாக மாறியுள்ளது திரிபுரா: முதல்வர் வேதனை
-
'இளைஞர்களை வேகமாக சேருங்கள்' கட்சியினரை முடுக்கிவிடும் பழனிசாமி
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உச்ச நீதிமன்ற உயர் மட்ட குழு ஆய்வு
-
இலங்கைக்கு படகில் கடத்த பதுக்கப்பட்ட 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ராமநாதபுரத்தில் ஒருவர் கைது
-
ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
-
குடமுழுக்கை புறக்கணிக்கும் முதல்வர்: சேகர்பாபு விளக்கம்