சேதமான 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் சாலையில் தேசமான, 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் வழியாக போரூர் செல்லும் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழில்பேட்டைகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிகமாக செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பட்டுநுால்சத்திரம், கச்சிப்பட்டு பகுதிகளில், இந்த சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பபட்டது.

இந்த நிலையில், சாலையில் நடுவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை, 'மேன்ஹோல்' மூடி உடைந்து உள்ளது. இதனால், அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், உடைந்த, 'மேன்ஹோல்' மூடியால் விபத்தில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள், சேதமடைந்துள்ள, 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement