'தனிஷ்க்' வைர கண்காட்சி 20 சதவீத சலுகை நாளை வரை

சென்னை:நாட்டின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, 'ஹயாத் ரெசிடென்சி'யில் வைர கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில், உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் இடம் பெற்றுள்ளன. வைர நகைகளின் மதிப்பில், 20 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.
இந்த கண்காட்சி, நாளை வரை நடக்கிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், தனிஷ்க்கின் வைர நகை தொகுப்புகளை பார்க்கலாம்.
நகை தொகுப்புகள், 2 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான விலையில், விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொரு ஆபரணமும், 'தனிஷ்க்'கின் தனித்துவமிக்க நுணுக்கமான, கைவினைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பாரம்பரிய நேர்த்தியை விரும்பினாலும் அல்லது நவீன வடிவமைப்பை விரும்பினாலும், இக்கண்காட்சியானது அனைவருடைய ரசனைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ற ஒரு ஆபரணம் இருப்பதை உறுதி செய்கிறது.
இதனுடன் தனிஷ்க், இதுவரை இல்லாத வகையில் அறிமுகப்படுத்தும், மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம்.குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படும்.
இச்சலுகையில், பழைய தங்கத்திற்கு, 2 காரட் வரை கூடுதல் மதிப்பு பெற்று பயன்பெறலாம்.
வைர நகைகளை வாங்கும்போது, பழைய தங்கத்தின் மதிப்பில், 2 காரட் கூடுதலாக பெறலாம்.
மேலும்
-
ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை
-
மின் கணக்கீட்டு அட்டைக்கு 'குட்பை'; கட்டண விபரம் இனி செயலியில் வரும்
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை
-
முதனை கிராம விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை முகாம்
-
'சைபர்' அடிமையாக்கும் மர்ம கும்பல்; சென்னையில் போலி 'கால் சென்டர்'