சார்பதிவாளரை கண்டித்து பத்திர எழுத்தர்கள் பணிப்புறக்கணிப்பு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது, வெளி நபர்களை வைத்து பத்திரப்பதிவு செய்யும் சார் பதிவாளரை கண்டித்து பத்திர எழுத்தர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மூன்று நாட்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் பத்திரப்பதிவு அலுவலகம் கூட்டமின்றி காணப்பட்டது.
ராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து வகையான நிலங்கள் பத்திரப்பதிவிற்கு வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் வரை உயர்த்தவும் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் பத்திரப்பதிவின் போது நிலத்திற்கு 20 சதவீதமும் கட்டடத்திற்கு 20% உயர்த்தினால் மட்டுமே பதிவு செய்யப்படும் என சார் பதிவாளர் வாய்மொழியாக உத்தரவிட்டதால் பதிவு செய்ய முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பத்திர எழுத்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதை கண்டித்தும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாத நபர்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டு நிர்வாகத்தில் தலையிட எதிர்ப்பு தெரிவித்தோம் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மூன்று நாட்கள் பத்திரப்பதிவு செய்யாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து ராஜபாளையம் ஆவண எழுத்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அரவிந்தன் கூறியதாவது: பிரச்சனைக்குப்பின் போராட்டம் அறிவித்ததை அடுத்து சார் பதிவாளர் முத்துச்சாமி ஆவண எழுத்தர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பத்திரப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். இருப்பினும் சார் பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே செயல்பட்டு வரும், அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாத டிரைவர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர் இருவரையும் வெளியேற்ற மறுத்துவிட்டார்.
எனவே இப் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் எங்களது அலுவலகங்களை பூட்டி ஜூன் 30 முதல் ஜூலை 2 ம் தேதி வரை மூன்று நாட்கள் பத்திரப்பதிவு செய்யாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்றார். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுவதாக சார் பதிவாளர் மிரட்டுவதாக ஆவண எழுத்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
மக்காச்சோளம் சாகுபடிக்கு வழிகாட்டுதல்... தேவை; வேளாண்மைத்துறை கவனம் செலுத்துமா?
-
வாய் கோமாரி தடுப்பூசி முகாம் நாளை... துவக்கம்; 3 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
-
விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி
-
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!
-
திண்டிவனத்திற்கு மாஜி முதல்வர் வருகை வரவேற்பு குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
-
டாஸ்மாக்கில் மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ; வைரலால் ஆயுதப்படைக்கு மாற்றம்