பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
அவனியாபுரம்: ''பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது போலீசார், எதிர்தரப்பினரிடமும் மனு பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது இன்னும் தொடர்கிறது. இது தலித் விரோத நடவடிக்கை. பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது வழக்கு தொடுப்பது என்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற செயலாகும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா மட்டும் தான் திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறி வருகிறார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காக்கிறார் என குறிப்பிட்டு இருந்தேன். தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கும் பதில் பா.ஜ., வுக்குத் தான். கூட்டணி ஆட்சி இல்லை. அ.தி.மு.க., அதற்கு உடன்படாது என்ற விடையை பா.ஜ., வினருக்குத்தான் கூறியிருக்கிறார். அதேபோல் அ.தி.மு.க., வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். பாஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இணைப்பு உள்ளதே தவிர பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.
அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ஜ., விலகினால் விடுதலைச் சிறுத்தைகள் சேருமா என்ற யூகத்திற்கு, அப்படி ஒரு நிலை எழும் போது பதில் சொல்கிறேன்.
திடீரென பா.ம.க., ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு என்ன பாசம் என அன்புமணி கூறியுள்ளார். அக்கட்சி எப்படியாவது போகட்டும் என்று நான் கருதவில்லை. யாரோ சொல்வதை கேட்பதைவிட தந்தை சொல்வதை கேளுங்கள் என்று ஒரு பொறுப்பான வார்த்தையாகத்தான் பாசம் என்பதை குறிப்பிட்டேனே தவிர பிணைப்பான வார்த்தையாக சொல்லவில்லை என்றார்.
மேலும்
-
மக்காச்சோளம் சாகுபடிக்கு வழிகாட்டுதல்... தேவை; வேளாண்மைத்துறை கவனம் செலுத்துமா?
-
வாய் கோமாரி தடுப்பூசி முகாம் நாளை... துவக்கம்; 3 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
-
விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி
-
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!
-
திண்டிவனத்திற்கு மாஜி முதல்வர் வருகை வரவேற்பு குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
-
டாஸ்மாக்கில் மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ; வைரலால் ஆயுதப்படைக்கு மாற்றம்