கலப்பட உணவு பொருட்களை கண்டறிவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு



பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கலப்பட உணவு பொருட்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை சார்பாக, நடமாடும் பகுப்பாய்வு ஆய்வகத்தின் மூலம் உணவு நொருட்களில் கலப்படத்தை எளிய முறையில் கண்டறிதல் பற்றியும், உணவு பொருட்களை லேபிள் பார்த்து வாங்குவது பற்றியும், தரமான உணவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, கடைகளில் உணவு மாதிரி எடுத்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரமற்ற உணவு பொருளை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, புதன் சந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement